ஆட்டோ மோதி நீதிபதி உயிரிழந்த விவகாரம் ; ஆட்டோவால் மோதி திட்டமிட்டு கொலை செய்யப்பட்டதாக உயர்நீதிமன்றத்தில் சிபிஐ தகவல்

0 3016
ஆட்டோவால் மோதி திட்டமிட்டு கொலை செய்யப்பட்டதாக உயர்நீதிமன்றத்தில் சிபிஐ தகவல்

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்ட நீதிபதி உத்தம் ஆனந்த் கடந்த ஜூலை மாதம் 28ம் தேதி ஆட்டோ மோதி உயிரிழந்தது, ஒரு திட்டமிட்ட கொலை என உயர் நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.

பல்வேறு மாபியா கொலை வழக்குகளை விசாரித்து வந்த நீதிபதி ஆனந்த் திடீரென ஆட்டோ மோதி இறந்தது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது. இது திட்டமிடப்பட்டு நடந்த கொலையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்ட நிலையில், ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து, விசாரணையை சிபிஐக்கு மாற்றியது.

சிபிஐ அதிகாரிகள் சம்பவம் நடந்த பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்தனர். அதில் உடற்பயிற்சிக்காக சாலையோரம் நடந்து சென்ற நீதிபதி மீது, ஆட்டோ வேண்டும் என்றே மோதுவது தெரிந்தது. இதையடுத்து ஆட்டோ டிரைவர் மற்றும் உதவியாளர் என இருவர் கைது செய்யப்பட்டனர். விசாரணை இறுதிக் கட்டத்தில் உள்ளதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments