கல்லூரி மாணவி கத்தியால் குத்திக் கொலை ; மாணவியைக் கொன்ற நபர் தானும் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சி

0 5747
கல்லூரி மாணவி கத்தியால் குத்திக் கொலை

சென்னை தாம்பரத்தில் தனியார் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திக் கொலை செய்தவன், தானும் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

குரோம்பேட்டை ராதாநகரை சேர்ந்த சுவேதா, தனியார் கல்லூரியில் லேப் டெக்னீசியன் படித்து வந்தார். அந்த கல்லூரி அருகே, திருக்குவளை பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரனுடன் நீண்ட நேரமாக பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ராமச்சந்திரன் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுவேதாவின் கழுத்தில் குத்தி கொலை செய்து விட்டு தானும் கழுத்தை அறுத்துக் கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தகவல் அறிந்து சென்ற சேலையூர் போலீசார், மாணவியின் உடலைக் கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த ராமச்சந்திரனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் காதல் விவகாரத்தில் இந்த கொலை நிகழ்ந்ததா? அல்லது வேறு காரணமா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments