நடுக்கடலில் மீன்பிடி படகில் தீ விபத்து ; கடலில் குதித்து உயிர் தப்பிய மீனவர்கள்

0 1551
நடுக்கடலில் மீன்பிடி படகில் தீ விபத்து ; கடலில் குதித்து உயிர் தப்பிய மீனவர்கள்

நாகப்பட்டினம் அருகே நடுக்கடலில் படகு தீப்பற்றி எரிந்த நிலையில், அதிலிருந்த மீனவர்கள் 7 பேரும் கடலில் குதித்து உயிர் தப்பினர். நம்பியார் நகர் பகுதியை சேர்ந்த லோகநாதன் என்பவருக்கு சொந்தமான படகில் மீனவர்கள் 7 பேர் நாகைக்கு கிழக்கே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது, திடீரென படகில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. காற்றின் வேகத்திற்கு படகு மளமளவென எரிந்த நிலையில், நிலைமையை உணர்ந்த மீனவர்கள் கடலில் குதித்து உயிர் தப்பினர். அங்கு வேறொரு படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் கடலில் தத்தளித்தவர்களை மீட்டனர்.

பேட்டரி மின் கம்பியில் கசிவு ஏற்பட்டு, தீப்பொறி பெட்ரோல் டேங்க் மீது பட்டு தீ விபத்து நிகழ்ந்திருக்கக் கூடும் என கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments