தூத்துக்குடியில் கண்டெய்னர் பெட்டி தலையில் விழுந்து தொழிலாளி பலி

0 1834
தூத்துக்குடியில் கண்டெய்னர் பெட்டி தலையில் விழுந்து தொழிலாளி பலி

தூத்துக்குடியில், கிரேன் உதவியுடன் கண்டெய்னர் பெட்டியை நகர்த்தும்போது, எதிர்பாரதவிதமாக தொழிலாளியின் மேல் விழுந்து தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக, சாலை ஓரத்தில் இருந்த, கட்டிட வேலை பொருட்கள் அடங்கிய கண்டெய்னர் பெட்டியை வேறு இடத்திற்கு நகர்த்தும் பணியில், தொழிலாளர்கள் காமாட்சி நாதன், ஜோயல், கிரேன் ஓட்டுநர் அலி பாதுஷா ஆகியோர் ஈடுபட்டனர். கண்டெய்னரை நகர்த்தும் போது, கிரேன் எதிர்பாரத விதமாக மேலே சென்று உயரழுத்த மின் கம்பியில் பட்டுள்ளது.

இதனால் பதற்றமடைந்த கிரேன் ஓட்டுனர், கண்டெய்னரை விடுவிக்கும் கீயரை இயக்கியதால், கீழே இருந்த காமாட்சி நாதன் மீது விழுந்து தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் படுகாயம் அடைந்த ஜோயல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments