அலகாபாத் சாமியார் நரேந்திர கிரி மரணம் ; சிபிஐ விசாரணைக்கு உத்தர பிரதேச அரசு பரிந்துரை

0 1202
அலகாபாத் சாமியார் நரேந்திர கிரி மரணம் ; சிபிஐ விசாரணைக்கு உத்தர பிரதேச அரசு பரிந்துரை

உத்தர பிரதேசத்தில் அகில பாரத அகார பரிஷத் அமைப்பின் தலைவராக இருந்த மகந்த் நரேந்திர கிரியின் மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு மாநில அரசு பரிந்துரைத்துள்ளது.

உத்தர பிரதேசத்தின் பாரம்பரிய மிக்க இந்து மடங்களில் ஒன்றான அலகாபாத் பாகம்பரி மடத்தில் அதன் தலைவரும் சாமியாருமான மகேந்திர கிரி கடந்த திங்கள் கிழமை தனது அறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். இது குறித்து நடந்த முதற்கட்ட விசாரணையில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

அவர் எழுதி வைத்ததாக கூறப்படும் தற்கொலை கடிதத்தில், தமது சீடரான ஆனந்த் கிரி என்பவர், சொத்து விவகாரம் தொடர்பாக தம்மை அவமானப்படுத்தியதால் தற்கொலை செய்வதாக குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் இன்று வெளியான சாமியார் நரேந்திர கிரியின் போஸ்ட் மார்ட்டம் அறிக்கையில் அவர் மூச்சுத் திணறி இறந்து விட்டதாகவும் கழுத்தில் வி வடிவ அடையாளம் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments