3000 கிலோ ஹெராயின் கடத்தல் விவகாரம்-ஏற்றுமதி இறக்குமதி உரிமத்தை சென்னை தம்பதி வாடகைக்கு விட்டதாகத் தகவல்

0 1625

குஜராத்தில் மூவாயிரம் கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சென்னை தம்பதி, ஏற்றுமதி இறக்குமதி உரிமத்தை வாடகைக்கு விட்டதாகக் கூறப்படுவது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆப்கானிஸ்தானில் இருந்து ஈரான் வழியாகக் குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்துக்கு வந்த இரு சரக்குப் பெட்டகங்களில் மூவாயிரம் கிலோ ஹெராயின் போதைப்பொருளை வருவாய்ப் புலனாய்வு இயக்கக அதிகாரிகள் பறிமுதல்செய்தனர். இது தொடர்பாக ஆப்கானியர் 4 பேர், உஸ்பெகிஸ்தான் நாட்டவர் ஒருவர், சென்னை தம்பதி உட்பட இந்தியர் மூவர் என மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை கொளப்பாக்கத்தைச் சேர்ந்த சுதாகர் - வைசாலி தம்பதி ஊரடங்கு காலத்தில் வேலையின்றி இருந்ததால் தங்கள் பெயரில் எடுத்திருந்த ஏற்றுமதி இறக்குமதி உரிமத்தை வாடகைக்குக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. போதைப்பொருள் கடத்தல் குறித்து தெரிந்தே வாடகைக்கு விட்டனரா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments