பள்ளத்தில் சிக்கிய டாடா ஏஸ்... காண்டான வாகன உரிமையாளர்... ஓட்டுநருக்கு சரமாரி அடி..!

0 9164

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில், டாடா ஏஸ் வாகனம் பள்ளத்தில் சிக்கியதால் ஆத்திரமடைந்த வாகன உரிமையாளர், ஓட்டுநரை சரமாரியாக தாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

முனியம்மாள் என்ற அந்த பெண் சொந்தமாக டாடா ஏஸ் வாகனம் வைத்திருக்கிறார். இந்த வாகனத்தின் ஓட்டுநராக அதே பகுதியைச் சேர்ந்த பழனிசாமி என்பவர் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், முனியம்மாளும், பழனிசாமியும் சரக்கு ஏற்றுவதற்காக, மார்கெட் பகுதிக்கு வந்துள்ளனர்.

தற்போது மார்க்கெட் இடிக்கப்பட்டு கிடக்கும் நிலையில், வாகனத்தை திருப்பும் போது, எதிர்பாராதவிதமாக, சாக்கடை கால்வாய்க்கு மேற்பரப்பில் இருந்த சிமெண்ட் சிலாப் இடிந்து, வாகனத்தின் சக்கரம் பள்ளத்தில் சிக்கிக் கொண்டது. இதனால், ஆத்திரமடைந்த உரிமையாளரான அந்த பெண் ஓட்டுநரை திட்டித் தீர்த்து தாக்க தொடங்கி, கல்லால் அடித்தார்.

பின்னர் சம்பவ இடத்திற்கு போலீசார் அந்த பெண்ணை சமாதானப்படுத்தியதை அடுத்து, அங்கிருந்தவர்கள் உதவியுடன் வாகனம் மீட்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments