பெகாசஸ் உளவு குற்றச்சாட்டு: நிபுணர் குழுவை அமைக்கிறது உச்சநீதிமன்றம்

0 2097

பெகாசஸ் உளவு குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் நிபுணர் குழு ஒன்றை நியமிக்கும் என தலைமை நீதிபதி என்வி ரமணா தெரிவித்துள்ளார்.

இது குறித்த விரிவான உத்தரவு அடுத்த வாரம் பிறப்பிக்கப்படும் என அவர் கூறினார். இது தொடர்பாக இன்று நடந்த விசாரணையில், நிபுணர் குழுவில் யார் யார் இடம் பெறுவார்கள்? என அடுத்த வாரம் தான் முடிவெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

பெகாசஸ் உளவு விவகாரத்தில் அரசுக்கு எந்த பங்கும் இல்லை என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதுடன், அது குறித்த உறுதி மொழிப் பத்திரத்தை தாக்கல் செய்வதில் தேசிய பாதுகாப்பு பிரச்சனைகள் இருப்பதாகவும் கூறியது.

ஆனால் தனிநபர்களின் போன்கள் இந்த உளவு மென்பொருளால் உளவு பார்க்கப்பட்டதா? அப்படியானால் அது சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டதா என்பது குறித்து மட்டுமே அரசின் பதிலை எதிர்பார்ப்பதாக நீதிபதிகள் அரசிடம் வினவினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments