தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்-வானிலை ஆய்வு மையம்

0 15659

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். நாளைய தினம் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் உட்பட 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னையில் இரு நாட்களுக்கு நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் வடக்கு அந்தமான் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், இரு நாட்களுக்கு அங்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments