ஆப்கானிஸ்தானில் இருந்து குஜராத்துக்கு 3000 கிலோ ஹெராயின் கடத்திய விவகாரம்- 8 பேர் கைது.. நாடு முழுவதும் சோதனைகள் தீவிரம்..!

0 2030

ஆப்கானிஸ்தானில் இருந்து ஈரான் வழியாகக் குஜராத்துக்குச் சரக்குப் பெட்டகத்தில் மூவாயிரம் கிலோ ஹெராயின் கடத்தியது தொடர்பாக இதுவரை மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முந்த்ரா துறைமுகத்தில் போதைப்பொருள் பிடிபட்டதையடுத்து டெல்லி, நொய்டா, சென்னை, கோவை, அகமதாபாத், மாண்ட்வி, காந்திதாம், விஜயவாடா ஆகிய இடங்களில் வருவாய்ப் புலனாய்வு இயக்க அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது மேலும் 37 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக ஆப்கன் நாட்டவர் 4 பேர், உஸ்பெகிஸ்தான் நாட்டவர் ஒருவர், இந்தியர்கள் மூவர் என மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வருவாய்ப் புலனாய்வு இயக்ககம் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில் பணமோசடி நடைபெற்றதா என்கிற கோணத்தில் அமலாக்கத் துறையும் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments