ஒரு லட்சம் விவசாயிகளுக்கு புதிதாக மின் இணைப்பு -துவக்கி வைத்தார் முதலமைச்சர்

0 2451
ஒரு லட்சம் விவசாயிகளுக்கு புதிதாக மின் இணைப்பு -துவக்கி வைத்தார் முதலமைச்சர்

ரு லட்சம் விவசாயிகளுக்கு புதிதாக மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் முதன்முறையாக திருவாரூரில் சூரிய மின்சக்தி பூங்கா தொடங்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளார்.

சென்னை கோட்டூர்புரத்திலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திட்டத்தை தொடங்கி வைத்ததன் அடையாளமாக விவசாயிகளுக்கு மின் இணைப்பிற்கான ஆணையை வழங்கினார்.  

முன்னதாக நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விவசாயிகளுக்கான மின் இணைப்பு திட்டம் தலைமுறை, தலைமுறையாய் பயனளிக்கக் கூடியது என குறிப்பிட்டார். கடந்த 2006-2011 திமுக ஆட்சியில் 2லட்சத்து9ஆயிரம் பேருக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டதாக சுட்டிக்காட்டினார். ஆனால், 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் இரண்டு லட்சம் மின் இணைப்பு மட்டுமே வழங்கப்பட்டிருப்பதாகவும் முதலமைச்சர் கூறினார்.

அடுத்த 10 ஆண்டுகளில் 17,980 மெகாவாட் மின்சாரம் தயாரிப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது என தெரிவித்த முதலமைச்சர், வரும் காலங்களில் சூரிய சக்தி மின் உற்பத்திக்கு முன்னுரிமை வழங்கப்பட உள்ளது என்றார்.

மின் இணைப்பை பெற்ற விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், 6 ஆண்டுகாலமாக காத்திருந்த நிலையில், தற்போது மின் இணைப்பு கிடைத்திருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments