மும்பை பங்குச்சந்தையில் எழுச்சி... நானூறு புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்

0 3609

மும்பை பங்குச்சந்தையில் வணிகம் எழுச்சியடைந்ததால் சென்செக்ஸ் நானூறு புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது.

கடந்த இரு வாரங்களாக இந்தியப் பங்குச்சந்தைகளில் வணிகம் ஏற்றமடைந்துள்ளது. இன்றைய வணிகநேரத் தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தைப் பங்குவிலைக் குறியீடு சென்செக்ஸ் 474 புள்ளிகள் உயர்ந்து 59 ஆயிரத்து 402 ஆக இருந்தது.

தேசியப் பங்குச்சந்தைப் பங்கு விலைக் குறியீடு நிப்டி 151 புள்ளிகள் உயர்ந்து 17 ஆயிரத்து 698ஆக இருந்தது. நிலக்கரி, உருக்கு நிறுவனங்கள், வாகன உற்பத்தி நிறுவனங்களின் பங்கு விலை 3 விழுக்காடு வரை உயர்ந்தது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments