”எங்களைப் பார்த்து எப்படி சிரிக்கலாம்” என இரு தரப்பினரிடையே மோதல்.. மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட கும்பல்..!

0 5061

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், உணவகத்தில் உணவருந்திக் கொண்டிருந்த போது மதுபோதையில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், ஒருவரையொருவர் தாக்கிக்கொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

கோவில்பட்டி பார்க் எதிரேயுள்ள தனலட்சுமி என்ற உணவகத்திற்கு வந்த அருண்குமார் மற்றும் அவரது நண்பர்கள், உணவருந்திய போது அங்கிருந்த ஊழியர்களிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, மதுபோதையில் எதிரே அமர்ந்து உணவருந்திக்கொண்டிருந்த பிரசாத் மற்றும் அவரது நண்பர்கள், தங்களை பார்த்து தான் சிரிப்பதாக எண்ணி, அருண்குமார் தரப்பிடம் கேட்டுள்ளனர்.

இதில் இருத்தரப்புக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு கைக்கலப்பாக மாறியதில், அனைவரும் நாற்காலிகளை எடுத்து வீசி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

இருத்தரப்பு மோதலால், உணவகம் சூறையாடப்பட்ட சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments