வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் கர்நாடக சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் சித்தராமய்யா பேச்சு... அவையில் சிரிப்பலை..!

0 9287

வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் காங்கிரஸ் முன்னாள் முதலமைச்சர் சித்தராமய்யா பேசியதால் கர்நாடக சட்டப்பேரவையில் சிரிப்பலை எழுந்தது.

போலீசாரின் செயல்பாடுகள் குறித்து, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்கும் சித்தராமய்யா ஆவேசமாக பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவரது வேட்டி அவிழ்ந்து விட்டதை கவனித்த மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் டிகே சிவகுமார், சித்தராமையாவின் அருகே சென்று காதருகே விஷயத்தை கூறினார். அதைக் கேட்டதும் வேட்டி அவிழ்ந்து விட்டதா என சத்தமாக சித்தராமையா மைக்கில்  கூறியதை கேட்ட அவையில் இருந்த எம்எல்ஏக்கள் அனைவரும் சிரித்தனர்.

அப்போது சபாநாயகர் ஏதோ வேடிக்கையாக கூற, தமது தொப்பை பெரிதாகி விட்டதால் வேட்டி அவிழ்ந்து விட்டதாக சித்தராமையாவும் வேடிக்கையாக பதிலளித்தார். இமேஜை காப்பாற்ற மாநில காங்கிரஸ் தலைவர் முயன்றபோது, வேட்டி அவிழ்ந்ததை  சித்தராமையா பகிரங்கப்படுத்தி விட்டதாக மற்றொரு காங்கிரஸ் எம்எல்ஏ கூறியதும் அவையில்  சிரிப்பலையை ஏற்படுத்தியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments