பள்ளி மாணவியிடம் காதல் சேட்டை... ராட்சசன் வாத்தி ஆடியோ லீக்..! எஸ்.எப்.எஸ் பள்ளியிலிருந்து நீக்கம்

0 4733

புதுக்கோட்டை புனித பிரான்ஸ் டி சேல்ஸ் மெட்ரிக் பள்ளியில் 11 ஆம் வகுப்பு  மாணவியை கட்டாயப்படுத்தி  செல்போனில் பேசவைத்து காதல் சேட்டையில் ஈடுபட்ட ஆடியோ வெளியான நிலையில், வணிகவியல் ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.  வில்லங்க டியூசனுக்கு வீட்டுக்கு அழைத்த பாலியல் ராட்சசன் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு

செல்போனில் மன்மதன் போல பில்டப் செய்து பேசி மாணவிகளை காதல் டீயூசனுக்கு கட்டாயப்படுத்திய புகாரில் போலீசிடம் சிக்கிய 50 வயதான மன்மத ஆசிரியர் சண்முக நாதன் இவன் தான்..!

புதுக்கோட்டையில் எஸ்.எப்.எஸ் என்கிற புனித பிரான்ஸ் டி சேல்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கின்ற மாணவி ஒருவர் பள்ளிக்கு சென்ற சில நாட்களிலேயே வணிகவியல் ஆசிரியர் சண்முக நாதனின் கொள்ளிக்கண்ணில் பட்டு விட, வலுக்கட்டாயமாக அவரிடம் தனது செல்போன் நம்பரை கொடுத்து பேசச்சொல்லி டார்ச்சர் செய்ததாக கூறப்படுகின்றது.

அவனது தொல்லையில் சிக்கிய மாணவி ஒருவர் தனது சகோதரனின் அறிவுறுத்தலின் பேரில் சண்முக நாதனுடன் பேசிய ஆடியோக்களை பதிவு செய்து அம்பலப்படுத்தியுள்ளார்.

பள்ளி வகுப்பறையில் சந்தேகம் கேட்ட அந்த மாணவியின் அருகில் நின்றதை கூட வக்கிரமாக நினைத்து சந்தோசப்பட்டதாக மாணவியிடம் கூறுகிறான் சண்முக நாதன்

பள்ளியில் வைத்தே அந்த மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட திட்டமிட்ட காமுகன் சண்முக நாதன், அங்கு சிசிடிவி இருப்பதால் செய்யமுடியவில்லை என்று கூறியுள்ளான்

சண்முக நாதன் காதல் அத்துமீறல் ஆடியோக்களுடன் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில் பள்ளி நிர்வாகம் சண்முக நாதனை பணி நீக்கம் செய்தது. முதலில் நடவடிக்கை எடுக்காமல் தாமதித்த போலீசாருக்கு மாவட்ட நீதிபதி எச்சரிக்கை விடுத்ததால் உடனடியாக போக்சோ வழக்கில் சண்முக நாதனை காவல்துறையினர் கைது செய்துள்ள்னர்.

பாலியல் ராட்சசன் சண்முக நாதனுக்கு திருமணமாகி ஒரு மகனும் மகளும் உள்ளனர். ஏற்கனவே டுட்டோரியல் கல்லூரி நடத்தி மாணவிகளிடம் அத்துமீறிய சண்முக நாதன், மற்றோரு பள்ளியிலும் இதே போன்று மாணவிகளிடம் சேட்டையை தொடங்கியதால் பணியில் இருந்து விரட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது போல ஆடியோ ஆதரத்துடன் சிக்கி இருப்பது குறிப்பிடதக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments