வாஷிங்டனில் பிரதமர் மோடி... துணை அதிபருடன் இன்று பேச்சு.!

0 3504

அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனுக்குச் சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அங்கு துணை அதிபர் கமலா ஹாரிசையும், ஐந்து பன்னாட்டு நிறுவனங்களின் தலைவர்களையும் இன்று சந்தித்துப் பேசுகிறார்.

கொரோனா சூழலுக்குப் பின் பிரதமர் நரேந்திர மோடி முதல் வெளிநாட்டுப் பயணமாக அமெரிக்காவுக்குச் சென்றார். நெடுந்தொலைவு அதிகநேரம் விமானப் பயணித்தில் தமது நேரத்தை வீணாக்காமல் விமானத்தில் இருந்தபோதே கோப்புகளைப் பார்வையிட்டதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். வாஷிங்டன் ஆண்ட்ரூஸ் விமானப்படைத் தளத்தில் பிரதமர் மோடியை அமெரிக்க அதிகாரிகள் வரவேற்றனர்.

மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான இந்தியர்கள் பிரதமர் மோடியை வரவேற்றனர். பிரதமரின் கார் அருகே வந்ததும் தேசியக் கொடியை அசைத்தும், கையசைத்தும் முழக்கமிட்டனர்.

தம்மைச் சந்தித்தவர்களிடம், மோடி கைகுலுக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, வாஷிங்டனில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மிகச் சிறப்பான வரவேற்பளித்ததற்கு நன்றி தெரிவித்துள்ளார். நமது மக்களே நமது வலிமையென்றும், உலகெங்கிலும் உள்ள இந்தியர்கள் தனித்துவமாக உள்ளது பாராட்டத் தக்கது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய ராணுவத்திற்கு 30 பிரிடேட்டர் டிரோன்கள் வாங்கப்படும் நிலையில் அதை தயாரிக்கும் அமெரிக்க நிறுவனமான ஜெனரல் அட்டோமிக்ஸ்-ன் சிஇஓ நீல் புளூவை, வாஷிங்டனில் பிரதமர் மோடி சந்திக்க இருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.

சுமார் 22 ஆயிரம் கோடி மதிப்பில் இதற்கான ஒப்பந்தம் போடப்பட்டு, அவற்றில் ஏற்கனவே 2 டிரோன்கள் வழங்கப்பட்டு அவை ஏடன் வளைகுடா முதல் இந்தோனேசிய லம்போக் ஜலசந்தி வரை உள்ள பகுதிகளில் நமது கடற்படைக்கான கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

50 ஆயிரம் அடி உயரம் வரை தொடர்ந்து 27 மணி நேரம் பறக்கும் திறன் படைத்த இந்த டிரோன்கள், கண்காணிப்பு, உளவு பார்த்தல் மற்றும் எதிரி இலக்குகள் மீது தாக்குதல்களை நடத்தும் திறன் படைத்தவை ஆகும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments