கடைசி நிமிடத்தில் அவசர அவசரமாக ஓடி வந்து வேட்பு மனு தாக்கல் செய்த பெண்..! போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்

0 3685

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள நாயக்கனேரி மலை கிராமத்தில் வெளியூரைச் சேர்ந்த பெண் ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்ததாக கூறி கிராம மக்கள் மாதனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இதுநாள் வரை நடைபெற்ற தேர்தல்களில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கும், ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கும் மலைவாழ் மக்கள் மற்றும் பொதுப் பிரிவினருக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு நாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவி பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்டது.

இதனால் தேர்தலை புறக்கணிப்பதாக கூறி கிராமத்தில் ஒருவர் கூட வார்டு உறுப்பினர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இந்த நிலையில் இந்துமதி என்ற பெண் நாயக்கனேரி ஊராட்சிக்கு உட்பட்ட காமனதட்டி பகுதியில் வசித்து வருவதாக கூறி அவசர அவசரமாக ஓடி வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், வேட்பு மனுவை ஏற்க கூடாது என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments