சாலையோரம் கிடந்த ரூ.40,000-ஐ ஊராட்சி தலைவரிடம் ஒப்படைத்த சிறுமி.. நேர்மைக்கு குவியும் பாராட்டு..!

0 3615

வந்தவாசி அருகே சாலையோரம் கிடந்த 40,000 ரூபாயை கண்டெடுத்த ஐந்தாம் வகுப்பு மாணவி அதனை ஊராட்சி தலைவரிடம் ஒப்படைத்தார்.

கூலித்தொழிலாளி ஏழுமலை, கலையரசி தம்பதியின் மகளான கோதை பிருதூர் கிராமத்தில் உள்ள தனது வீடருகே விளையாடி கொண்டிருந்தார். அப்போது சாலையோரம் 500 ரூபாய் பணக்கட்டு இருப்பதை கண்ட கோதை அதனை ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரிடம் ஒப்படைத்தார்.

சிறுமியின் நேர்மையைப் பாராட்டி அவருக்கு சால்வை அணிவித்த ராஜேஸ்வரி பணத்தை தனது தந்தை மூலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments