2024ல் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் நடக்க வாய்ப்பு -எடப்பாடி பழனிச்சாமி

0 6000

2024 -ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு வருவதால், எம்பிக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறினார்.

நெல் கொள்முதல் நிலையங்களில் மழையில் நனைந்து ஒரு லட்சம் நெல் மூட்டைகள் வீணாகி உள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments