கல்குவாரி பாறைகளை தகர்க்க வைத்த வெடி-அதிர்வால் வீடு இடிந்ததில் 3 வயது குழந்தை உயிரிழப்பு

0 1883

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே சீலாத்திகுளத்தில் கல்குவாரி பாறைகளை தகர்க்க வைத்த வெடியால் ஏற்பட்ட அதிர்வின் காரணமாக 10-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.

குவாரிக்கு அருகே இருந்த முருகன் என்பவரது வீடு இடிந்ததில், அதில் உறங்கிக் கொண்டிருந்த அவரது 3 வயது குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

சம்பவ இடத்தில், ராதாபுரம் தாசில்தார் மற்றும் போலீசார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். உயிரிழப்பிற்கு காரணமான அந்த கற்குவாரியை மூட வேண்டும் என பலமுறை புகாரளித்தபோது, நடவடிக்கை எடுக்காததால், 3 வயது குழந்தையை இழக்க நேரிட்டுள்ளதாக, பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments