விரும்பிய நாளில் குழந்தையை அறுவைச் சிகிச்சை மூலம் எடுக்கக் கூடாது - மா.சுப்பிரமணியன்

0 3111

மகப்பேறுக் காலத்தில், விரும்பிய நாளில் அறுவைச் சிகிச்சை மூலம் முன்கூட்டியே குழந்தையை எடுக்கக் கூடாது என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உருக்கமாக கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கீதா ஜீவன் ஆகியோர் பங்கேற்றுக் கர்ப்பிணிப் பெண்களுக்கு வளையல், சேலை உள்ளிட்ட சீர்வரிசைப் பொருட்களை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், இயற்கையாகக் குழந்தை பிறக்கும் வகையில் உடல்நலத்துடன் தாய்மார்கள் இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

குழந்தை ஆணோ..பெண்ணோ..உணவு,கல்வியில் பாரபட்சம் கூடாது என அமைச்சர் கீதா ஜீவன் கேட்டுக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments