ஆப்கானிஸ்தானில் இருந்து 3000 கிலோ ஹெராயின் கடத்தல் -சென்னை தம்பதி குறித்து காவல்துறை தீவிர விசாரணை

0 2438

ஆப்கானிஸ்தானில் இருந்து குஜராத்துக்கு மூவாயிரம் கிலோ ஹெராயின் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான சென்னையைச் சேர்ந்த தம்பதி குறித்துத் தமிழக காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் சரக்குப் பெட்டகத்தில் சுமார் 21,000 கோடி ரூபாய் மதிப்புடைய மூவாயிரம் கிலோ ஹெராயினை அதிகாரிகள் பறிமுதல் செய்த விவகாரத்தில், ஆசிஸ் டிரேடிங் கம்பெனி என்னும் பெயரில் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனம் நடத்தி வரும் சென்னையைச் சேர்ந்த சுதாகர் - வைசாலி தம்பதியரை அதிகாரிகள் கைது செய்தனர்.

இருவரும் சென்னையில் ஆசிஸ் சோலார் சிஸ்டம் என்கிற நிறுவனத்தை நடத்தி வருவது தெரியவந்துள்ளது. சென்னை கொளப்பாக்கத்தில் கடந்த எட்டு ஆண்டுகளாகக் குடியிருந்து வரும் இவர்கள் சென்னைத் துறைமுகம் வழியாகவும் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டார்களா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பதால் கைதானவர்கள் குறித்த விவரங்களை மத்திய வருவாய்ப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளிடம் பெற்று தமிழ்நாடு காவல்துறையினரும் விசாரணை நடத்துகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments