பாகிஸ்தான் வழியாக அமெரிக்காவுக்கு பயணமானார் பிரதமர் மோடி

0 3555

அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடியின் விமானம் தனது வான்வழியை பயன்படுத்திக் கொள்ள பாகிஸ்தான் அனுமதி வழங்கியது.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு பிரிவு 370 ஐ கடந்த 2019ல் மோடி அரசு நீக்கியதை தொடர்ந்து இந்திய-பாகிஸ்தான் உறவுகள் மேலும் மோசமடைந்தன. அதன் விளைவாக, மோடி மற்றும் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் ஆகியோர் தனது வான்வெளியை பயன்படுத்த பாகிஸ்தான் 3 முறை அனுமதி மறுத்தது.

அது குறித்து சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பிடம் இந்தியா தனது எதிர்ப்பை பதிவு செய்தது. எனினும் அதன்பின்னர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இலங்கைக்கு சென்ற போது, அவரது விமானம் இந்திய வான்வழியில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. ஆப்கனில் தாலிபன்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அதன் வான்வெளி விமான போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளதால் ஆப்கனை தவிர்த்து விட்டு பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த பிரதமர் மோடி முடிவு செய்த நிலையில் பாகிஸ்தான் அனுமதி அளித்துள்ளது.

இந்த நிலையில் தமது குழுவினருடன் அமெரிக்க பயணம் மேற்கொள்ளும் மோடியின் விமானம் பாகிஸ்தான் வான்வெளியில் பறக்க அனுமதி கோரப்பட்டதை பாகிஸ்தான் ஏற்று, மோடியின் விமானம் பறந்து சென்றுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments