3 மாத பெண் குழந்தையை ரூ.1.80 லட்சத்திற்கு விற்றதாக பெற்றோர் உள்ளிட்ட 5 பேர் கைது.!

0 1947

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மூன்று மாத பெண் குழந்தையை ஒரு லட்சத்து80ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்த விவகாரத்தில் பெற்றோர், குழந்தையை வாங்கிய தம்பதி, இடைத்தரகர் என 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

வடவீக்கம் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் - மீனா தம்பதிக்கு ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் இருந்த நிலையில், மூன்று மாதங்களுக்கு முன் நான்காவதாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.

தொடர்ச்சியாக நான்கும் பெண் குழந்தைகள் பிறந்ததால் இதனால் கடைசியாக பிறந்த குழந்தையை திருச்சி மண்ணச்சநல்லூரைச் சேர்ந்த முத்தையா என்பவன் மூலம், கோவையைச் சேர்ந்த தம்பதிக்கு ஒரு லட்சத்து 86 ஆயிரம் ரூபாய்க்கு சரவணன் - மீனா தம்பதியினர் விற்பனை செய்துள்ளனர்.

குழந்தை வீட்டில் இல்லாதது பற்றி பக்கத்து தெருவில் வசிக்கும் மீனாவின் தாய் வீட்டுக்குவந்து குழந்தையை பற்றி கேட்கும் போதெல்லாம் ஏதாவது ஒரு காரணம் கூறி சரவணனும், மீனாவும் மழுப்பி வந்ததால், சந்தேகமடைந்து போலீசில் புகாரளித்த போது, குழந்தை விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments