பொங்கலுக்கு வலிமையுடன் மோதுகிறதா பீஸ்ட்..? பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

0 3346

நடிகர் அஜித்குமாரின் வலிமை திரைப்படம் வரும் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ள நடிகர் விஜயின் பீஸ்ட் திரைப்படமும் பொங்கலுக்கு திரைக்கு வரக்கூடும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

வலிமை படத்தின் இறுதிகட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெறும் நிலையில், ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நவம்பர் 20-ஆம் தேதிக்குள் விஜயின் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து உச்ச நட்சத்திரங்களான அஜித் மற்றும் விஜய் ஆகியோரின் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடைசியாக 2014ஆம் ஆண்டு பொங்கலன்று அஜித்தின் வீரமும் விஜய்யின் ஜில்லாவும் வெளியாகின.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments