2 டோஸ் தடுப்பூசி அல்லது கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதி-திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு

0 3222

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனத்திற்கு வரக்கூடிய பக்தர்கள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் அல்லது தரிசனம் செய்வதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு எடுத்த கொரோனா நெகடிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி வெளியிட்ட அறிக்கையில், இலவச தரிசன டிக்கெட்டுகள் வருகிற 25 ஆம் தேதி முதல் ஆன்லைனில் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 26 தேதி முதல் அக்டோபர் 31 தேதி வரை ஒரு நாளைக்கு 8 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட் ஆன்லைனில் வழங்கப்பட உள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments