இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற பெண், கார் மோதியதில் படுகாயம்... அலட்சியமாக சாலையை கடந்ததால் விபரீதம்

0 5022

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் இருசக்கர வாகனத்தில் அலட்சியமாக சாலையை கடக்க முயன்ற பெண், கார் மோதியதில் படுகாயமடைந்தார்.

காமராஜர் நகர் பகுதியில் வாகனங்கள் ஏதும் வருகிறதா என்பதை பற்றி கவலைப்படாமல் சாலையை கடக்க முயன்ற மாலதி என்பவர் மீது வேகமாக வந்த கார் மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

கார் மோதியதில் படுகாயமடைந்த மாலதி, சிகிச்சைக்காக திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மாலதி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற காரை சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments