குடும்ப தகராறால் 4 நாட்களாக மனைவி-குழந்தைகளை வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு சென்ற கணவன்

0 3522

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே 4 நாட்களாக வீட்டிற்குள் பூட்டி வைக்கப்பட்ட மனைவி, குழந்தைகளை போலீசார் பூட்டை உடைத்து மீட்டனர்.

தொண்டி காந்தி தெருவில் வசித்து வரும் செல்லக்கனி என்பவருக்கு கவிதா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் செல்லக்கனி  மனைவி,குழந்தைகளை வீட்டுக்குள் வைத்து விட்டு வெளியில் பூட்டி சென்று விட்டார்.

  ஆனால் 4 நாட்களாகியும் கணவர் வராததால் கவிதா தனது செல்போன் மூலம் 100க்கு போன் செய்து உதவி கேட்டதை அடுத்து அனைவரும்  பத்திரமாக மீட்கப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments