கனடா நாடாளுமன்ற தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 17பேர் வெற்றி

0 2280

கனடாவில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்திய வம்சாவளியினர் 17 பேர் எம்பிக்களாக வெற்றி பெற்றுள்ளனர்.

தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தனிப்பெரும்பான்மைக்கு தேவையான 170 இடங்களை அவரது லிபரல் கட்சி பெறாவிட்டாலும் இதுவரை அக்கட்சிக்கு 156 இடங்கள் கிடைத்துள்ளதால்  அவர் 3 ஆவது முறையாக பிரதமர் ஆவார் என கூறப்படுகிறது. இந்த தேர்தலில் இனியும் வாக்குகள் எண்ணப்பட உள்ளதால் தமக்கு ஆதரவு அதிகரிக்கும் என அவர் தனது ஆதரவாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

முந்தைய அரசில் அமைச்சர்களாக இருந்த இந்திய வம்சாவளியினரான பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சஜ்ஜன், அனிதா ஆனந்த். பர்திஷ் சாகர் ஆகியோர் இந்த தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர். நியூ டெமாக்ரடிக் கட்சியை சார்ந்த ஜக்மீத் சிங் பர்னபி தெற்கு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments