அதிவேகமாக சென்ற ஷேர்ஆட்டோ சாலைத் தடுப்பில் மோதி விபத்து

0 2466
அதிவேகமாக சென்ற ஷேர்ஆட்டோ சாலைத் தடுப்பில் மோதி விபத்து

சென்னை அடுத்த தாம்பரம் அருகே அதிவேகமாகச் சென்ற ஷேர்ஆட்டோ, சாலைத்தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில் ஆட்டோவில் பயணித்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தாம்பரத்தில் இருந்து கட்டட தொழிலாளர்கள் 6 பேரை ஏற்றிச் சென்ற ஷேர்ஆட்டோ இரும்புலியூர் சிக்னல் அருகே முன்னால் அதிவேகமாக சென்ற ஆம்னி பேருந்தை முந்தி செல்ல முற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது அதிவேகத்தால் கட்டுப்பாட்டை இழந்து வலதுபக்க சாலையின் தடுப்பில் மோதி ஆட்டோ விபத்துக்குள்ளானது.

இதில் பயணிகள் 3 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில், 3 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்தை ஏற்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்ற ஆட்டோ ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments