குஜராத்தில் ரூ.21ஆயிரம் கோடி மதிப்புள்ள 3000 கிலோ போதைப் பொருள் பறிமுதல்

0 1600

குஜராத்தில் 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக வருவாய் புலனாய்வு இயக்குநரகத்திடம், அமலாக்கத்துறை விளக்கம் கோரியுள்ளது.

முந்த்ரா துறைமுகத்தில் 3 ஆயிரம் கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இவை ஆப்கானிஸ்தானில் இருந்து கடத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த தம்பதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து வருவாய் புலனாய்வு இயக்குநரகத்திடம், அமலாக்கத்துறை மேலதிக விளக்கம் கோரியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments