பெங்களூரு: அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து... குழந்தை உள்பட 3 பேர் உடல் கருகி பலி

0 1960

கர்நாடக மாநிலம் பெங்களூரு அடுத்த தேவசிக்கனஹள்ளியில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தை உள்பட 3 பேர் பலியாகினர்.

குடியிருப்பின் 3-வது தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் பால்கனியில் நின்ற வயதான பெண், ஒரு குழந்தை உள்பட 3 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 5 பேரை தீயணைப்பு துறையினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பினர்.

3 வீடுகள் கருகி சேதமான நிலையில் தீ பற்றியதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments