ஐ.பி.எல்: பரபரப்பான ஆட்டத்தில் பஞ்சாப் அணியை 2 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் அணி வெற்றி.!

0 3057

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 2 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 185 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தொடக்க வீரர் யசஸ்வி ஜெய்ஷ்வால் 49 ரன்கள் சேர்த்தார். பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தொடர்ந்து விளையாடிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் மயங்க் அகர்வால் 67 ரன்கள் சேர்த்தார். 20 ஓவர்களில் அந்த அணி 4 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்து கடைசிப் பந்தில் வெற்றிவாய்ப்பை இழந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments