நூதன முறையில் மக்களிடம் கோடிக்கணக்கில் பணம் மோசடி ; ரபோல் ரீடெய்ல்ஸ் நிறுவனர் கைது

0 12322
நூதன முறையில் மக்களிடம் கோடிக்கணக்கில் பணம் மோசடி

கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்த Rafoll retails pvt ltd நிறுவனத்தின் நிறுவனரான சிவன் நரேந்திரனை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

மளிகைப்பொருட்களில் 35 ஆயிரம் முதலீடு செய்தால், வாரம் 2500 ரூபாய் அல்லது மளிகைப்பொருட்களாக கிடைக்கும் என நூதன முறையில் சீட்டு நடத்தி மோசடி செய்த புகாரில், சிவன் நரேந்திரன் உட்பட 12 பேர் மீது
3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் வரை மோசடி செய்திருப்பதும், 2 கார்கள் மற்றும் 10 ஏக்கர் நிலத்தையும் மோசடி செய்த பணத்தில் வாங்கியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஏற்கனவே இதே நிறுவனத்தின் பெயரில், ஒரு முட்டையின் விலை 2 ரூபாய் 24 காசுகள் மட்டுமே என விளம்பரம் செய்து பொதுமக்களை ஏமாற்ற முயன்றதை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments