நகைக்கு இரு மடங்காக தங்க காசுகள் தருவதாக கூறி மோசடி ; மோசடி பெண்களுக்கு வலை

0 2736
நகைக்கு இரு மடங்காக தங்க காசுகள் தருவதாக கூறி மோசடி ; மோசடி பெண்களுக்கு வலை

மதுரை திருப்பரங்குன்றத்தில் நகைக்கு இருமடங்காக தங்க காசுகள் தருவதாக கூறி பெண் ஒருவரிடம் போலி காசுகளை கொடுத்து, 4 சவரன் செயினை பறித்துச் சென்ற மோசடி பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.

செக்காணூரணி பேருந்து நிலையத்தில் நின்றிருந்த நாகஜோதி என்பவரை அணுகிய 2 பெண்கள், நகைக்கு இரண்டுமடங்காக தங்க காசுகள் தருவதாக ஆசைவார்த்தை கூறியுள்ளனர். நாகஜோதியை நம்பவைக்க, ஒரேயொரு உண்மையான தங்கக்காசை அவர் கண்முன்பே அருகிலிருந்த நகைக்கடையில் காண்பித்துள்ளனர். கடைக்காரரும் அது உண்மையான தங்க நாணயம் எனக் கூறியுள்ளார்.

இதனையடுத்து மோசடிப் பெண்களை நம்பிய நாகஜோதி, கூடுதலாக தங்கம் கிடைக்கும் என்ற ஆசையில் கழுத்தில் கிடந்த 4 சவரன் செயினை கழற்றி கொடுத்துள்ளார். அதற்கு பதிலாக 10 நாணயங்களை கொடுத்துவிட்டு மோசடிப் பெண்கள் இருவரும் தப்பியுள்ளனர். அந்தக் காசுகளை விற்க முயன்றபோதுதான் அவை போலியானவை என நாகஜோதிக்குத் தெரியவந்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments