பரிசலில் ஆற்றை கடந்து பெண்ணுக்கு பிரசவம்; 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு குவியும் பாராட்டு..!

0 2630

கோயம்புத்தூர் மாவட்டத்தில், பரிசல் மூலம் காந்தையாற்றை கடந்து வந்த மருத்துவப் பணியாளர்கள், பழங்குடி இன பெண்ணிற்கு பிரசவம் பார்த்தனர்.

காந்தவயல் மலைக்கிராமத்தில் தாய் வீட்டில் வசித்த தீபாவிற்கு அதிகாலை திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. தகவலறிந்து 2 ஆம்புலன்ஸ் வாகனங்களில் வந்த மருத்துவப் பணியாளர்கள் காந்தையாற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலம் தண்ணீரில் மூழ்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

ஒரு ஆம்புலன்ஸ் காட்டுபாதை வழியாக காந்தவயல் நோக்கி செல்ல, மற்றொரு ஆம்புலன்ஸில் இருந்த மருத்துவ பணியாளர்கள் பரிசல் மூலம் ஆற்றை கடந்து காந்தவயல் வந்தடைந்தனர்.

பிரசவ வலியால் துடித்த தீபாவுக்கு, மருத்துவ பணியாளர்கள் பிரசவம் பார்த்ததில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பரிசல் மூலம் ஆற்றை கடந்து வந்த மருத்துவப் பணியாளர்களுக்கு பாராட்டுகள் குவிந்தன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments