பெங்களூருவில் அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 2 பெண்கள் உயிரிழப்பு..!

0 3836

பெங்களூர் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் உடல் கருகி பலியானார்கள். தேவசிக்கனஹள்ளி பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 3 வது தளத்தில் திடீரென தீப்பிடித்தது. அப்போது பால்கனியில் நின்று கொண்டிருந்த வயதான பெண் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்தி, படுகாயமடைந்த 6 பேரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பைப் லைனில் எரிவாயு கசிந்து தீப்பற்றி இருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த தீ விபத்தில் 3 வீடுகள் முழுவதுமாக சேதமடைந்தன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments