குண்டூரில் விநாயகர் விசர்ஜன ஊர்வலத்தின் போது, தெலுங்கு தேசம் - ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் இடையே மோதல்

0 1748

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் விநாயகர் விசர்ஜன ஊர்வலத்தின் போது, தெலுங்கு தேச கட்சியின் முன்னாள் உறுப்பினரின் வீட்டை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் சூறையாடினர்.

பெத்த நந்திபாடு மண்டலம், கொப்பரு பகுதியின் வழியாக ஊர்வலம் செல்லும் போது, அங்குள்ள தெலுங்கு தேச கட்சியின் முன்னாள் உறுப்பினர் ஜில்லா பரிஷத் சாரதாவின் வீட்டின் மீது, கற்களை வீசி தாக்கியதால், அவரது உறவினர்கள் காயம் அடைந்தனர். மேலும், அங்கிருந்த இரு சக்கர வாகனங்களுக்கு தீ வைத்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் கொளுத்தினர்.

பதற்றம் அதிகரித்ததை அடுத்து, போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தி கலவரக்காரர்களை கலைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments