5 முதல் 11 வயது சிறார்களுக்கும் தடுப்பூசி பலனளிக்கிறது ஃபைசர்...அனுமதி கோரி விரைவில் விண்ணப்பம்

0 1556

5 முதல் 11 வயது சிறார்களுக்கும் தங்கள் தடுப்பூசி பலனளிப்பதாகக் கூறியுள்ள ஃபைசர் நிறுவனம், அமெரிக்காவில் அதற்கான அனுமதி கோரி விரைவில் விண்ணப்பிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

பெரியவர்களுக்கு கொடுக்கப்படும் டோஸில் மூன்றில் ஒரு பங்கு அளவு, 5 முதல் 11 வயது சிறார்களுக்கு கொடுத்து பரிசோதிக்கப்பட்டதில், 2 டோஸ்களுக்கு பிறகு, பெரியவர்களைப் போலவே, வலுவான கோவிட் நோய் எதிர்ப்பு சக்தி உருவானதாக ஃபைசர் கூறியுள்ளது.

தடுப்பூசி போட்ட சிறார்களுக்கு, தடுப்பூசி போட்ட இடத்தில் லேசான வலி, காய்ச்சல் போன்ற வழக்கமான அறிகுறிகளே ஏற்பட்டதாகவும், தடுப்பூசி சிறார்களுக்கு பாதுகாப்பானது என தெரியவந்துள்ளதாகவும் ஃபைசர் கூறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments