ஹோட்டல் ருவாண்டா ஹாலிவுட் பட உண்மை நாயகனுக்கு 25 ஆண்டு சிறை

0 1965

பிரபல ஹாலிவுட் படமான ஹோட்டல் ருவாண்டாவின் உண்மை நாயகன் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாக ருவாண்டா நீதிமன்றம் 25 ஆண்டு சிறை தண்டனை வழங்கியுள்ளது.

1994-அம் ஆண்டில் ருவாண்டாவில் நடந்த இனப்படுகொலை சம்பவங்களின்போது, ஹோட்டல் நடத்தி வந்த Paul Rusesabagina, ஆயிரத்து 200 பேருக்கு அவரது ஹோட்டலுக்குள் அடைக்கலம் கொடுத்து காப்பாற்றினார்.

அந்த சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ”ஹோட்டல் ருவாண்டா” என்ற ஹாலிவுட் படம் 2004-ஆம் ஆண்டில் வெளியானது. அதிபர் பால் ககாமே-க்கு எதிராக தன்கருத்துக்களை தொடர்ந்து முன்வைத்துவந்த நிலையில், கிளர்ச்சி கும்பலுடன் இணைந்து 2018 மற்றும் 2019-ல் 9 பேரை கொன்றதாக Paul Rusesabagina மீது தொடரப்பட்ட வழக்கில் 25 வருடங்கள் சிறை தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments