இங்கிலாந்து சென்ற நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிக்கு மிரட்டல்... பாதுகாப்பு அதிகரிப்பு

0 2269

இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட  நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிக்கு மிரட்டல் விடுத்து இமெயில் வந்ததை தொடர்ந்து அவர்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

ஏற்கனவே பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆடவர் அணியினர் ரத்து செய்த நிலையில் நியுசிலாந்து பெண்கள் அணிக்கு மிரட்டல் இமெயில் வந்துள்ளது.

நியூசிலாந்து அணி பற்றி இமெயிலில் நேரடியாக குறிப்பிடவில்லை என்றும் இருந்தாலும் மிரட்டலை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து வாரியம், தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments