கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கும் - சென்னை உயர்நீதிமன்றம்

0 2475

4 சக்கர வாகனங்களின் பம்பர் பொருத்துவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

4 சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்துவதால் விபத்து காலங்களில் 'ஏர் பேக்' (air bag) செயல்பட முடியாத நிலை ஏற்படுவதாகவும், விபத்துகள் நேரும்போது எதிர் வாகனம் மற்றும் பொதுமக்களுக்கு கடுமையான சேதம் ஏற்படுத்துவதாகவும் கூறி, நான்கு சக்கர வாகனங்களில் பம்பர்கள் பொருத்த மத்திய அரசு தடை விதித்தது.  இந்த உத்தரவை எதிர்த்து பம்பர் தயாரிப்பு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

பம்பர் பொருத்திய வாகனங்களின் ஓட்டுனர்கள் அதிவேகத்தில் இயக்குவதாக குறிப்பிட்ட நீதிபதிகள், இந்த தடை உத்தரவு பொதுமக்களின் பாதுகாப்புக்கு மிக அவசியம் என்று கருத்து தெரிவித்தனர். பொதுமக்களின் நலன் கருதியே மத்திய அரசு இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது என்றும், அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மத்திய அரசின்  இந்த உத்தரவை மாநில அரசு கடுமையாக அமல்படுத்த உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments