குழந்தையுடன் நடைமேடைக்கும், ரயிலுக்கும் இடையே சிக்கிக் கொண்ட பெண்... ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்றதால் விபரீதம்

0 3794

உத்தரபிரதேசத்தில் கையில் குழந்தையுடன் ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்ற பெண் தவறி விழுந்து நடைமேடைக்கும், ரயிலுக்கும் இடையே சிக்கிக் கொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

Charbagh ரயில் நிலையத்தில் கழிவறைக்கு செல்வதற்காக நின்று கொண்டிருந்த ரயிலில் குழந்தையுடன் ஏறிய பெண், மீண்டும் கீழே இறங்குவதற்குள் ரயில் புறப்பட்டுவிட்டது. பதற்றத்தில் ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்ற பெண், கால் தவறி கீழே விழுந்து நடைமேடைக்கும், ரயிலுக்கும் இடையேயான சிறிய இடைவெளியில் சிக்கிக் கொண்டார்.

ரயில்வே பாதுகாப்பு போலீசார், விரைந்து செயல்பட்டு செயினை இழுத்து ரயிலை நிறுத்தி, தாயையும், சேயையும் பத்திரமாக மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments