அமெரிக்காவில் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் பரவிய ஃபுளு காய்ச்சலால் இறந்தவர்களை விட கொரோனாவால் இறந்தவர்கள் அதிகம் என தகவல்

0 2494

அமெரிக்காவில் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் பரவிய ஃபுளு காய்ச்சலால் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட இப்போது கோவிட் வைரஸால் இறந்தவர்களில் எண்ணிக்கை அதிகம் என தகவல் வெளியாகியுள்ளது.

Johns Hopkins பல்கலைகழகத்தின் தரவுகளின் படி,  கோவிட் பாதிப்பால் இதுவரை 6 லட்சத்து 75 ஆயிரத்து 722 பேர் உயிரிழந்துள்ளனர். இது , முதலாம் உலக போரின் கடைசி ஆண்டான 1918-ல் அமெரிக்காவில் பரவத் தொடங்கிய ஃபுளு காய்ச்சலால் பலியானவர்களின் எண்ணிக்கையான 6 லட்சத்து 75 ஆயிரத்தை விட அதிகம்.

இதற்கிடையே, கொரோனா தடுப்பூசி குறித்து பரவும் தவறான தகவலால் அமெரிக்காவின் 24 சதவீத மக்கள் இன்னும் முதல் தவணை தடுப்பூசி கூட போட்டுக்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments