ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கியுள்ள மாணவர்கள்

0 2012

கம்போடியாவில் பாலிடெக்னிக் மாணவர்கள் இணைந்து ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கியுள்ளனர். தலைநகர் நாம் பென்-ல் உள்ள National Polytechnic Institute-ஐ சேர்ந்த மாணவர்கள், கம்போடியாவில் அதிகரித்து வரும் வாகன நெரிசல் பிரச்சனைக்கு தீர்வு காணும் நோக்கில் இந்த ட்ரோனை வடிவமைத்துள்ளனர்.

முதற்கட்டமாக, 60 கிலோ எடையுள்ள ஒருவரை, 4 மீட்டர் உயரம் வரை தூக்கி, 10 நிமிடங்கள் வரை பயணிக்கும் வகையில் மாதிரி ட்ரோன் செய்யப்பட்டுள்ளது. 3 ஆண்டு உழைப்பில் உருவான இந்த ட்ரோனை வடிவமைக்க சுமார் 20 ஆயிரம் அமெரிக்க டாலர் செலவானதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments