லாரி மீது பயணிகள் ரயில் மோதி கோர விபத்து.. சுக்கு நூறாக நொறுங்கிய லாரி

0 3068

மைசூருவில் இருந்து மயிலாடுதுறை நோக்கி வந்த பயணிகள் ரயில் தண்டவாளத்தில் நின்ற மினி லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

ஆவலஹள்ளி பகுதியில் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் லெவல் கிராசிங் தண்டவாளத்தில் நின்று கொண்டு இருந்த லாரி மீது மோதியுள்ளது.

தகவல் அறிந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில், தண்டவாள சீரமைப்பு பணிகள் காரணமாக ஒரு பாதையில் மட்டும் ரயில் இயக்கப்பட்டதால் தண்டவாளத்தை கடக்க முயன்ற லாரி தண்டவாளத்தில் சிக்கியதாகவும், அந்த நேரத்தில் ரயில் வந்ததால், லாரியை அங்கேயே விட்டுவிட்டு ஓட்டுநர் தப்பியதாகவும் தெரிவித்துள்ளனர். தலைமறைவான லாரி ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments