இளம்பெண்ணை திருமண ஆசை காட்டி பாலியல் பலாத்காரம்.. தனியார் பள்ளி ஆசிரியருக்கு 10 வருடம் சிறை, 11ஆயிரம் அபராதம்!

0 2538

சேலத்தில் இளம் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய தனியார் பள்ளி ஆசிரியருக்கு 10 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 

பெரமனூரைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் கலக்கம்பாடியில் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றிய போது அதே ஊரைச் சேர்ந்த 25 வயது இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.  அப்போது திருமண ஆசை வார்த்தை கூறி அந்த பெண்ணை செந்தில்குமார் பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பான புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட செந்தில்குமாருக்கு சேலம் மாவட்ட மகளிர் நீதிமன்றம் 10வருடம் சிறையும், 11ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments