ஐ.பி.எல்: 92 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பெங்களூரு... கொல்கத்தா எளிதில் வெற்றி..!

0 4269

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 92 ரன்கள் மட்டும் சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கொல்கத்தா வீரர்கள் வருண் சக்கரவர்த்தி, ஆந்திரே ரஸ்செல் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா அணி 10 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. தொடக்க வீரர்கள் சுப்மான் கில் 48 ரன்னும், வெங்கடேஷ் ஐயர் 41 ரன்களும் சேர்த்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments