முந்திரி நிறுவனத் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் ; தற்கொலை அல்ல கொலை எனக் கூறி உறவினர்கள் சாலை மறியல்

0 3346
தற்கொலை அல்ல கொலை எனக் கூறி உறவினர்கள் சாலை மறியல்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே முந்திரி ஏற்றுமதி நிறுவனத்தில் தொழிலாளி ஒருவர் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் நிலையில், அது கொலை எனக் கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கடலூர் திமுக எம்.பி டி.ஆர்.வி ரமேஷுக்குச் சொந்தமான அந்த நிறுவனம் பணிக்கன்குப்பம் பகுதியில் இயங்கி வருகிறது.

இதில் கடந்த 7 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தவர் மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ். முந்திரியை திருடிவிட்டதாகக் கூறி ஞாயிற்றுக்கிழமை இரவு நிறுவனத்தில் உள்ள அறை ஒன்றில் அவரை அடைத்து வைத்திருந்ததாகக் கூறப்படும் நிலையில், மறுநாள் அதிகாலை அவர் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டதாக குடும்பத்தாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் கோவிந்தராஜின் உடல் முழுவதும் காயங்கள் இருப்பதாகவும் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் அவரை அடித்தே கொலை செய்திருக்கின்றனர் என்றும் கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறி, உறவினர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments