மளிகைக் கடையில் குளிர்பானம் வாங்கி அருந்திய சிறிது நேரத்தில் இரத்த வாந்தி எடுத்த சிறுவர்கள்

0 4054

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் குளிர்பானம் அருந்திய 2 சிறுவர்கள் இரத்த வாந்தி எடுத்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வெங்கடேசன் அலி தெருவைச் சேர்ந்த 6 வயதான லக்ஷ்மன் சாய் என்ற சிறுவனும் அவனது உறவினரின் மகனான ஒமேஸ்வரன் என்ற சிறுவனும் வீட்டின் அருகிலுள்ள மளிகைக் கடையில் 10 ரூபாய் மதிப்பிலான குளிர்பானத்தை வாங்கி அருந்தியுள்ளனர்.

சிறிது நேரத்தில் இருவருக்கும் இரத்த வாந்தி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. உடனடியாக இருவரும் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments